உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை மோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

நடுவீரப்பட்டு : வானமாதேவி உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலையை சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி கெடிலம் ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்திற்கு கடலுார் பகுதியிலிருந்து வரும் சாலை மற்றும் பாலம் இணைப்பு பகுதி பள்ளமாக இருந்து வந்தது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தில் கருங்கற்கள் கொட்டினர். ஆனால் தார் கலந்து போடாததால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் இந்த இடத்தில் தார் கலந்த ஜல்லிகள் போட்டு போக்குவரத்து தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை