உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை

 சி.என்.,பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை

நடுவீரப்பட்டு: பண்ருட்டி-குள்ளஞ்சாவடிக்கு செல்லும் அரசு பஸ்சை சி.என்.பாளையம் வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்ருட்டி - குள்ளஞ்சாவடிக்கு அரசு பஸ்தடம் எண்: 18 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக குள்ளஞ்சாவடிக்கு இரண்டு தடவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நடுவீரப்பட்டிலிருந்து பண்ருட்டிக்கு காலை 10:00 மணிக்கு வந்து, பாலுார் வழியாகவும்,மாலை 4:00 மணிக்கு சி.என்.பாளையம் வழியாகவும் இயக்கப்பட்டு வருகிறது. மீதி நேரத்தில் பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு வழியாக குள்ளஞ்சாவடிக்கு இயக்கப்படுகிறது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் சுற்று பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் பண்ருட்டிக்கு செல்ல காலை 8:30 மணிக்கு வரும் அரசு பஸ்சை தவற விட்டால், அடுத்து மதியம் தான் பண்ருட்டிக்கு செல்ல பஸ் உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பண்ருட்டிக்கு, பாலுார் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் அரசு பஸ்சை காலை சி.என்.பாளையம், சாத்திப் பட்டு வழியாக பண்ருட்டிக்கு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி