உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி அருகே சாலை மறியல்

புவனகிரி அருகே சாலை மறியல்

புவனகிரி: பொது இடத்தில் கூட்டமாக இருக்க வேண்டாம் என போலீசார் கூறியதை கண்டித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் காணும் பொங்கல் தினத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்க ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பயணிகள் நிழற்குடையில் கூட்டமாக இருந்த சிலரை அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத் தினர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் சிலர் சிதம்பரம்- விருத்தாசலம் சாாலையில் மறியல் செய்ய திரண்டனர். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எச்சரித்து கலைந்து போக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை