குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி தொகுதியில் இன்று, 18 இடங்களில் எஸ்.ஐ.ஆர்., முகாம்கள் நடைபெறு கின்றன. இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன. கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் இன்று, 18 இடங்களில் உதவி முகாம்கள் நடக்கின்றன. நடுவீரப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப் பள்ளி, திருவந்திபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குப்பம் அன்னை வேளாங்கண்ணி குளுனி உயர்நிலைப் பள்ளி, வெள்ளைக்கரை காட்டுப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, குடிகாடு சமுதாய கூடம், பச்சையாங்குப்பம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, ஆலப்பாக்கம் ஊராட்சி அலுவலகம், சுப்ரமணியபுரம் ஸ்ரீ ராமலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குள்ளஞ்சாவடி அரசினர் மேல்நிலைப்பள்ளி, கண்ணாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேலவிநாயகர் குப்பம் வள்ளலார் உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வடலுார்-சேராக்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பார்வதிபுரம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, கருங்குழி அரசினர் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். இன்று காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாம்களில் கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சந்தேகங்களை வாக்காளர்கள் தீர்த்து கொள்ளலாம்.