உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்ரீபாடலி அன்ட் கோ ஜூவல்லரி கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு

ஸ்ரீபாடலி அன்ட் கோ ஜூவல்லரி கடலுாரில் புதுப்பொலிவுடன் திறப்பு

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதை அருகில் ஸ்ரீபாடலி அன்ட் கோ ஜூவல்லரி புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடந்தது. ஜூவல்லரி உரிமையாளர்கள் மணி, அனந்த கிருஷ்ணன், சிவக்குமார் வரவேற்றனர். உரிமையாளர் மணியின் மூத்த சகோதரி சகுந்தலா சுப்பராயன் குத்துவிளக்கேற்றினார். சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், தங்க நகை முதல் விற்பனையையும், ரவிசங்கர் வெள்ளி விற்பனையையும் துவக்கி வைத்தனர். விழாவில், வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், ஸ்ரீவள்ளி விலாஸ் பாலு, சீனிவாசன், ரமேஷ், வடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் நகை மாளிகை மாணிக்கம், சந்திரசேகர், மூத்த வக்கீல்கள் சிவமணி, பால தண்டாயுதம், கடலுார் வள்ளி விலாஸ் முரளி, குறிஞ்சிப்பாடி நியூ ஸ்ரீ வள்ளி விலாஸ் சிங்காரவேல், பண்ருட்டி வள்ளி விலாஸ் தங்க மாளிகை சரவணன், டாக்டர் சுரேஷ், காங்., மாநகரத் தலைவர் வேலுசாமி, குமார், ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி செந்தில்குமார், விஸ்வநாதன், ரவி, அழகப்பா குரூப்ஸ் ராஜகோபால், மணி, முத்து, மகாவீர் ஜூவல்லரி விஜயகுமார்.ஜெய் மகாவீர் ஜூவல்லரி அசோக், ஆனந்தா ஜூவல்லரி ஆசை தம்பி, ஸ்ரீசக்தி ஜூவல்லரி கிருபா, கந்தன், ஜெகன்நாதன், பாடலி சரவணன், குமார் மற்றும் நகைக் கடை உரிமையாளர்கள், பத்தர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தங்க நகைகள் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யயப்படுகிறது. தங்க காமதேனு சிறுசேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை