உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருப்பதி ரயில் அறிவிப்பு பயணிகள் வரவேற்பு

 திருப்பதி ரயில் அறிவிப்பு பயணிகள் வரவேற்பு

பண்ருட்டி: பண்ருட்டியில் திருப்பதி ரயில் நின்று செல்ல அறிவிப்பிற்கு பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமனுக்கு ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். திருப்பதி-மன்னார்குடி பாமினி விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்ல கோரி பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமனிடம் பண்ருட்டி பி.ஆர்.டி.ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பண்ருட்டியில் திருப்பதி-மன்னார்குடி பாமினி ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு நேற்று வெளியானது. இதனையொட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் நலசங்க தலைவர் சுபாஷ், துணை தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் நரேஷ்சந்த், உறுப்பினர்கள் தினேஷ்குமார், சந்தோஷ், சுந்தர்ராஜன்,சுரேஷ்சந்த் ஆகியோர், பண்ருட்டிக்கு வருகை தந்த பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமனுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வினோத்குமார், முன்னாள் வர்த்தக பிரிவு அசோக்ராஜ், வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை