உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, 40 ஆண்டாக தார்ச்சாலை அமைக்க கோரிக்கை வைக்கும் கிராம மக்கள். அதை நிறைவேற்ற கேட்டு, தர்மபுரி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:நல்லம்பள்ளி ஒன்றியம், எர்ரபையனஹள்ளி பஞ்., சந்தாரப்பட்டி போயர்கொட்டாயில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கிறோம். பெரும்பாலானவர்கள் கல் உடைக்கும் கூலித்தொழில் செய்கிறோம். இதில், சந்தாரப்பட்டி முதல் போயர் கொட்டாய் வரையிலான, 1.5 கி.மீ., நீள மண் சாலை, 40 ஆண்டுக்கு முன் போடபட்டது. இது, குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள-வர்கள் வேலை தேடி, வெளியூர் செல்கின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லுாரி செல்ல சாலை வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள மண் சாலையை தார்ச்சா-லையாக அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இது-வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ