உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோட்டப்பட்டியில் எஸ்.பி., ஆய்வு

கோட்டப்பட்டியில் எஸ்.பி., ஆய்வு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட டி.அம்மாபேட்டை, கோம்பை, காரப்பாடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் உள்-ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு, நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்ப-டுகிறது. ரோந்து செல்லும் போலீசார், சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதுடன், சாராய ஊறலை அழித்து விட்டு திரும்புகின்-றனர். கடந்த, 11ல் தர்மபுரி எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற மகேஸ்-வரன் நேற்றிரவு, 7:00 மணிக்கு கோட்டப்பட்டி ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சு-வது, விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். முன்னதாக, மொரப்பூர், அரூர் ஸ்டேஷனிலும் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி