உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு

கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரிநீர் திறப்பு சற்று அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த ஜூலை, 3ல், 39.65 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, 30ல் நிரம்பியது. இந்நிலையில் பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்-தினம் வினாடிக்கு, 7,359 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 6,471 கனஅடியாக சரிந்தது.அதேபோல் வினாடிக்கு, 13,734 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 12,806 கனஅடியாக சரிந்தது. இரு அணைகளில் நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,000 கனஅடி-யாக இருந்த உபரிநீர் திறப்பு நேற்று, 10,000 கனஅடியாக சற்று அதிகரிக்கப்பட்டது.நீர்திறப்பு அதிகரிப்புமேட்டூர் அணை நீர்வரத்து குறைந்ததால் ஒரு வாரத்துக்கு பின் நேற்று முன்தினம், 16 கண் மதகு மூடப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 10,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு நேற்று காலை, 9:00 மணிக்கு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்