மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
18 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
18 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
18 hour(s) ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
தர்மபுரி: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை -வரும், 19 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்தனர். அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட, 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று இந்த வழக்கின் விசாரணைக்காக, அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் ஆஜராகவில்லை. மல்லிகாவின் தந்தை உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என, வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தனர். இந்த வழக்கிலுள்ள, ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட, 5 பேர் மட்டும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜன., 19- ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
01-Oct-2025