மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
08-Oct-2025
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
08-Oct-2025
தர்மபுரி வைர விழா பேரணி
08-Oct-2025
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் வினோத், 24. ஓசூர் விகாஷ் நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், நண்பரான ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் வசிக்கும் ரவிச்சந்திரன், 36, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சென்னசமுத்திரத்தை சேர்ந்த இளங்கோ, 35, ஆகியோர் கடந்த மாதம், 14 இரவு, 8:45 மணிக்கு ஓசூர் பஸ் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்தினர்.அப்போது, மர்ம கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் வினோத், ரவிச்சந்திரன், இளங்கோ ஆகியோரை அரிவாளால் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டியது. இதில் படுகாயமடைந்த மூவரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வினோத் கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இதில், ஓசூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வசீகரன், 21, உட்பட மூவர் வெட்டியது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், வசீகரன் மீது சிப்காட் ஸ்டேஷனில் ஒரு கொலை, கொலை முயற்சி வழக்கு உள்ளன. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார். அதையேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சரயு உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை, சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று வழங்கினார்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025