உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு

ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு ரயில்வே ஸ்டேஷனில் திறப்பு

தர்மபுரி, மா தென்மேற்கு ரயில்வேயில், பெங்களூரு ரயில்வே கோட்டத்தில், 40 ரயில்வே ஸ்டேஷன்களில், 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் மூலம், விற்பனை நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் சிறுதானிய விற்பனையை தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.இந்த அங்காடியில், சாமை, திணை, வரகு, பணி வரகு குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரயில் பயணிகள், பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் ஆகியோர், இந்த 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' விற்பனையகத்தில் தங்களுக்கு தேவையான சிறுதானியங்களை வாங்கிக் கொள்ளலாம். இதில், பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியர், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை