தர்மபுரி: தர்மபுரி அருகே, புலிக்கரையில், 30வது போலீஸ் ஸ்டேஷன் விரைவில் உதயமாக உள்ளது. அதற்கான திட்ட அறிக்கை அர-சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி சப்--டிவிஷனில், 6 போலீஸ் ஸ்டேஷன், பென்னாகரம் - சப்- டிவிசனில், 7, பாலக்கோடு, 6, அரூர், 10 உட்பட மாவட்டத்தில் மொத்தம், 29 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் தினசரி, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசா-ரிக்கப்படுகிறது. இந்நிலையில், தர்மபுரி சப்--டிவிஷனுக்கு உட்பட்ட மதிகோன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் செட்டிக்கரை, செம்மாண்டகுப்பம், புலிக்-கரை, உங்கரானஹள்ளி மூக்கனுார் உட்பட, 10க்கும் மேற்பட்ட பஞ்.,கள் உள்ளன. இதில், போலீசார் ரோந்து பணி உட்பட பல்-வேறு பணிச்சுமைகள் அதிகம் ஏற்பட்டு வருவதாக கருதப்பட்-டது. மேலும், புலிக்கரை, உத்தனுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 15 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷ-னுக்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் புகார்தாரர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.தற்போது, தர்மபுரி மாவட்டத்தில், 30வது போலீஸ் ஸ்டேஷ-னாக புலிக்கரையை தலைமையிடமாக கொண்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க பரிசீலிக்கப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போலீஸ் ஸ்டேஷன், வாடகை கட்டடத்தில் தற்காலி-கமாக செயல்பட உள்ளது. இதன் எல்லைகளாக, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனலி-ருந்து, கடகத்துார். மதிகோன்பாளையத்திலிருந்து செல்லியம்-பட்டி, புலிகரை, பாலக்கோட்டிலிருந்து சோமனஹள்ளி, பி.கொல்லஹள்ளி, காரிமங்கலத்திலிருந்து பூமாண்டஹள்ளி, பாப்-பாரப்பட்டியிலிருந்து பூகானஹள்ளி, கம்மாளபட்டி என, 8 பஞ்.,களுக்கு உட்பட்ட கிராமங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போலீஸ் ஸ்டேஷனை தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.