உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி இல்லை; சவுமியா

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி இல்லை; சவுமியா

பாப்பிரெட்டிப்பட்டி, ''தமிழக பள்ளிகளில், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி என்பது சுத்தமாக இல்லை,'' என, பசுமை தாயகம் தலைவர் சவுமியா பேசினார்.தர்மபுரி மாவட்டம் கடத்துார் ஒன்றியம், மோட்டாங்குறிச்சி ஊராட்சி நத்தமேடு கிராமத்தில், பா.ம.க., - எம்.பி., டாக்டர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானத்தையும், அஸ்திகிரியூரில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடத்தையும், திறந்து வைத்து அவர் பேசியதாவது:தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இருந்தாலும் பயிற்சி என்பது சுத்தமாக இல்லை. வாரத்திற்கு, ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட்டு பயிற்சி இருக்கிறது. விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உடல்நலம் மிக முக்கியமானது. உடல்நலம் நன்றாக இருந்தால், மனநலம் நன்றாக இருக்கும். மனநலம் நன்றாக இருந்தால் மது மற்றும் போதை பழக்கத்திற்கு போக மாட்டார்கள். இந்த போதை பழக்கத்தால் தமிழகத்தில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினால், மதுபோதைக்கு அடிமையாக மாட்டார்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தவே இந்த விளையாட்டு மைதானம் முயற்சி. மது போதை பழக்கம் இல்லாத தமிழகத்தை, அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க பாடுபடுவோம். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில் தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, மாவட்ட செயலாளர் அரசாங்கம், பா.ம.க., மாநில நிர்வாகி ராமசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை