உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை ஜோர்: பிச்சைக்காரர் வேடத்தில் உலா வரும் கும்பல்

மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை ஜோர்: பிச்சைக்காரர் வேடத்தில் உலா வரும் கும்பல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து பிச்சைக்காரர் போவையில் சிலர் கஞ்சா விற்கின்றனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் . மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. தேவை , அதிக விற்பனை சாத்தியக்கூறு உள்ள இடமாக திண்டுக்கல் மாவட்டம் இருப்பதால் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் மர்ம கும்பல் , அவர்களின் அடையாளம் வெளித்தெரியாமல் இருப்பதற்காக 17 வயது உட்பட்ட சிறார்களை விற்பனையில் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது.பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் பிச்சைக்காரர்கள் போல் சுற்றித்திரியும் நபர்கள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்கின்றனர். பாச்சலுார், செம்பராங்குளம், பெரியூர் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களிலும் தினசரி விற்பனை நடப்பதால் கூலி வேலைக்காக செல்பவர்கள் போதை அடிமைகளாக மாறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுற்றுலா இடங்கள், ஆன்மிக தலங்கள், வாகன சோதனை சாவடிகள் என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் போலீசார் கவனம் செலுத்துவதால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துார், நத்தம், ஆத்துார் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடக்கிறது. இதற்கு போலீஸ் ரோந்து இல்லாததே முக்கியக்காரணம். சட்டம் ஒழுங்கு நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்ட உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஊர் ஊருக்கு அலைக்கழிக்கப்படும் போலீசாரால் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. போலீஸ் ஸ்டேஷகளில் நிலவும் ஆள் பற்றாகுறையால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இனியும் கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் கஞ்சாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ............

மிட்டாய்போல் விற்பனை

கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை வழக்குகள் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுப்பதே அடுத்தடுத்த தவறுகளுக்கு முக்கியக்காரணம். கைது செய்யப்படும் நபர்கள் சில நாட்களிலே ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். வடகவுஞ்சி, பட்டியக்காடு, கருவேலம்பட்டி, கீழ்மலை மலையடிவார கிராமங்களில் 24 மணி நேரம் கிடைக்கும் மிட்டாய்போல் கஞ்சா , மதுவை விற்க தொடங்கிவிட்டனர். சில இடங்களில் அதிகாரிகளுக்கு தெரிந்தே எல்லா தவறுகளும் நடக்கிறது. வருமானம் கிடைப்பதால் அதை கண்டும் காணாததுபோல் செயல்படுகின்றனர். இதனால் கட்டவிழ்த்த தண்ணீர் போல் கஞ்சா பொட்டலங்களும், மதுபாட்டில்களும் சர்வசாதாரணமாக கைமாற்றப்படுகின்றன. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.- தனலட்சுமி, பழங்குடியினர் பெண்கள் இயக்கம், செம்பராங்குளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை