| ADDED : ஆக 13, 2024 05:52 AM
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்கம் சார்பாக, 57ம் ஆண்டு பாலபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. இதற்காக காலை, 8:10 மணிக்கு, 1,280 திருப்பாற் குடங்கள் கைலாசநாதர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. மேள-தாளம் முழங்க நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து, படிக்கட்டுகள் வழியாக மலை கோவிலை ஊர்வலம் அடைந்தது. காலை, 10:40 மணிக்கு பாலாபிஷேகம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக பெண்கள், அதிக அளவில் பால் குடம் எடுத்து வந்தனர். பாலாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பிறகு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் செய்தனர்.