உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 368 மனுக்கள் ஏற்பு

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரி-மைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 368 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்-களின் ஏழு வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி-யாக தலா, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, மாற்றுத்திறனா-ளிகள் நலவாரியம் மூலம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 4 பேருக்கு தலா, 17,000 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ