| ADDED : ஏப் 17, 2024 01:49 AM
பவானிசாகர்:நீலகிரி
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் தொகுதியில், பறக்கும்
படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி, பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து
வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர், மாற்று வழிகளை
பயன்படுத்தி, பணத்தை எடுத்து செல்கின்றனர்.இதுகுறித்து அரசியல்
கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: தேர்தல் செலவு, ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருகிறது. ஆளுங்கட்சியினரின் பணப் பரிமாற்றத்தை
பறக்கும் படை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.
எதிர்க்கட்சிகளின் பணத்தை பறிமுதல் செய்வதில் மட்டுமே குறியாக
உள்ளனர். கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே
சோதனையிடுகின்றனர். பவானிசாகர் தொகுதி வாக்காளர்களுக்கு
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் பண பட்டுவாடா செய்து வருகின்றனர்.
தொழிலாளி போர்வையில் டவுன் பஸ்கள், பழைய மொபட் உள்ளிட்டவற்றில் பணம்
எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு கூறினர்.