| ADDED : ஆக 13, 2024 07:47 AM
ஈரோடு: ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42, ஹோமியோபதி டாக்டர். கடந்த, 30ம் தேதி இரவு இவர் வீட்டில் புகுந்த ஆசாமிகள், 219 பவுன் நகை, 55 ஆயிரம் ரொக்கம், 25 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கரூரில் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். விசாரணையில் சென்னை, ஆவடி, சுரக்காபாளையம் பகுதி அகில் குமார் (எ) வெள்ளை, 21; சென்னை, திருமுல்லைவாயில், தென்றல் நகர் சஞ்சய் (எ) தனசேகர், 19; என்பது தெரிந்தது. இருவரிடமும் இருந்து 150 பவுன் நகை, ஒரு பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து எஸ்.பி., ஜவகர் கூறியதாவது: திருட்டு நடந்த, 12 நாட்களில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். இதில் குமார் மீது, ௨௦ திருட்டு 20 வழக்குகளும், சஞ்சய் மீது, 15 வழக்குகளும் உள்ளன. திருட்டில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகிறோம். வீட்டின் முன்புறம் பூட்டு தொங்கியதை பார்த்து நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர் செல்வோர் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்து செல்ல வேண்டும். வீடுகளில் பக்லர் அலாரம் பொருத்த மக்கள் முன்வர வேண்டும். இதன் மூலம் திருட்டு நடப்பதை தவிர்க்க இயலும். இவ்வாறு கூறினார்.