உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முறைகேடாக பிறந்த குழந்தை தத்து கொடுக்க முயன்ற தாய்

முறைகேடாக பிறந்த குழந்தை தத்து கொடுக்க முயன்ற தாய்

திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த சில நாட்களான குழந்தையை வேறு ஒரு பெண்ணுக்கு தத்து கொடுப்பதாக வெளியான தகவலையடுத்து, இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த, 21 வயது இளம்பெண். திருணமாகவில்லை. இவர் உறவினர் ஒருவருடன் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்பெண்ணுக்கு, 3 நாள் முன், பெண் குழந்தை பிறந்தது. இளம்பெண்ணிடம், அங்கு பணியில் இருந்த ஒப்பந்த துாய்மை பெண் பணியாளர் சந்தேகப்படும் விதமாக அவ்வப்போது வந்து பேசி சென்றார். இதனை பார்த்த பணியாளர்கள் அவரிடம் விசாரித்ததில், 'குழந்தையை என்னால் வளர்க்க முடியாது. எனவே, நீ எடுத்து கொண்டு வளர்த்து கொள்,' என்று கூறியது தெரிந்தது.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, துாய்மை பணியாளர் மற்றும் உறவினர் என, இருவரிடம் தெற்கு போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மருத்துவமனையில் அனுமதியான இளம்பெண், திருமணத்துக்கு முன்னதாக உறவினர் ஒருவரிடம் நெருங்கி பழகியதால் கர்ப்பமானார். அதனால், குழந்தை பிறந்தது. திருணமாகாத நிலையில், குழந்தை பிறந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற விரக்தி மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். இதையறிந்த, மருத்துவமனையில் வேலை செய்யும் ஒப்பந்த துாய்மை பணியாளர், 'இளம்பெண்ணிடம் குழந்தையை ஒன்று செய்து விடாதீர்கள். உங்களால், வளர்க்க முடியாவிட்டால், எனது உறவு பெண் ஒருவர், 11 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு வேண்டுமானால் அந்த குழந்தையை தத்து கொடுங்கள்,' என்று கூறினார். துாய்மை பணியாளரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு விசாரித்த போது தெரிய வந்தது. குழந்தையை அப்பெண் விற்க முயற்சிக்கவில்லை. திருணமாகாமல் குழந்தை பிறந்த காரணத்தால், வளர்ப்பது தொடர்பாக விரக்தியை தெரிவித்தார். இருவரிடம் விசாரணை செய்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை