உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணை நீர்வரத்து 4,592 கனஅடி

பவானிசாகர் அணை நீர்வரத்து 4,592 கனஅடி

புன்செய்புளியம்பட்டி:நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம், 10 அடி வரை உயர்ந்து, 68 அடியை எட்டியது. சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து சரிந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம், 1,287 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 4,592 கனஅடியாக நேற்று அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 68.90 அடி, நீர் இருப்பு, 10.4 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை