உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு

தேசிய நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு

ஈரோடு, தேசிய நீச்சல் போட்டிக்கு, ஈரோட்டை சேர்ந்த கல்லுாரி மாணவி, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு, ரங்கம் பாளையம், தன்னாட்சி மற்றும் சுயநிதி உதவி கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாமாண்டு பி.ஏ., (டிபன்ஸ் பிரிவு) படிக்கும் மாணவி பி.ஜி.தங்கம் ரூபிணி. நீச்சல் வீராங்கனையான இவர், விருதுநகரில் நடந்த நீச்சல் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றார். அதாவது, 800 மீட்டர், 400 மீட்டர், 200 மீட்டர் பை பின்ஸ் பிரிவுகள் மற்றும் 200 மீட்டர் சர்பேஸ் பிரிவு என, நான்கு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.இதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்கும், தேசிய அளவிலான மகளிர் சீனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். வரும் ஆக., 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது. தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு, தமிழக அளவில் தேர்வான, 20 பேரில் இவரும் ஒருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை