உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.இ.டி.கலை அறிவியல் கல்லுாரியில் முதுநிலை வகுப்புகள் தொடக்க விழா

வி.இ.டி.கலை அறிவியல் கல்லுாரியில் முதுநிலை வகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு: -ஈரோடு, வி.இ.டி. கலை அறிவியல் கல்லுாரியில் முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.கல்லுாரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். முதல்வர் நல்லசாமி வரவேற்று பேசினார். சமூக ஊடக நிறுவ-னத்தின் நிறுவனர் சிங்கை ராமச்சந்திரன் சிறப்பாளராக கலந்து கொண்டு, எம்.பி.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., சி.டி. எப்., எம்.எஸ்சி. கணினியியல் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கி வைத்து பேசுகையில்,'' மாணவர்கள் ஆர்வம், ஈடுபாடு, அறிவு, திறமை, ஆற்றலுடன் செயல்பட்டு சிறந்து துறையை, தேர்வு செய்தல் வேண்டும். அறிவார்ந்த மற்றும் கடுமையான உழைப்பே தமது துறையில் மிகச்சிறந்த உலகப் புகழ்பெற்ற வல்லுனராக வழிவகுக்கும்,'' என்றார்.நிர்வாக அலுவலர் லோகேஷ்குமார் மற்றும் துறைத்தலை-வர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ