| ADDED : ஜூன் 30, 2024 01:24 AM
ஈரோடு, கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி ஆண், பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூலை, 8ம் தேதி முதல், 19ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், 100 நாள் வேலை திட்ட இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். 87783-23213, 72006-50604, 0424-2400338 ஆகிய எண்கள் அல்லது ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள, பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம்.