உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு

பயறு வகை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவிப்பு

காங்கேயம் : காங்கேயம் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், குறுகிய கால பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம் மற்றும் நிலக்கடலை பயிரிட்டு, விவசாயிகள் பயனைடைய, வேளாண்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட விதைகள் காங்கேயம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உள்ளது. அத்துடன் பயிர்கள் நன்கு வளரவும், அதிக மகசூல் பெறவும் தேவையான நுண்ணுாட்ட சத்து, திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியனவும் மானிய விலையில் உள்ளன. இத்தகவலை காங்கேயம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரேவதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை