உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மகிளா காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்., சார்பில், சூரம்பட்டி நால் ரோட்டில், மாவட்ட தலைவி தீபா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா பேசினர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, பெண்களின் தாலி குறித்து பேசியதை கண்டித்து கோஷம் எழுப்பினர். கையில், 'மஞ்சள் கிழங்கு கொண்ட தாலியை' ஏந்தியபடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மண்டல தலைவர் விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூபைர் அகமது, துணை தலைவர் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை