உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொல்லம்பாளையம் கோவிலில் திருட்டால் அதிர்ச்சி

கொல்லம்பாளையம் கோவிலில் திருட்டால் அதிர்ச்சி

ஈரோடு : ஈரோடு, கொல்லம்பாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பூசாரி கோவிலுக்கு சென்றார். முன்புற காம்பவுண்ட் கேட் திறந்து கிடந்தது. சந்தேகத்துடன் உள்ளே சென்றபோது கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.வெள்ளி தட்டு, வெள்ளி டம்ளர், விநாயகர் நெற்றியில் போடப்படும், 40 கிராம் கொண்ட வெள்ளி பட்டை, உள்ளிட்டவை திருட்டு போனது தெரிந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். கோவிலில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒயரை எலி கடித்து விட்ட நிலையில், பல மாதங்களாக சரி செய்யாதது தெரிந்தது. கைவரிசை காட்டிய களவாணிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை