உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு

கேபிள் ஒயர் கட்டியவர் மின்சாரம் தாக்கி சாவு

பெருந்துறை: பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம், நாடார் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார், 47; மனைவி உஷாராணி, 43; தம்பதிக்கு, 20 வயதில் மகள் உள்ளார். முத்துகுமார், ௨0 ஆண்டுகளாக கேபிள் ஒயர் கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று காலை சிப்காட், ஏரி கருப்பராயன் கோவில் பின்புறம் கேபிள் இணைப்பு கொடுக்க சென்றார்.இதற்காக அப்பகுதி மின் கம்பத்தில் ஒயரை இழுத்து கட்டியபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கேபிள் ஒயர் பட்டு மின்சாரம் தாக்கி விழுந்தார். அப்பகுதியினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து கேபிள் உரிமையாளர் தங்கமுத்து மீது, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி