உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடி மாத காற்றால் பரிசல் துறை வெறிச்

ஆடி மாத காற்றால் பரிசல் துறை வெறிச்

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த, 17ம் தேதி ஆடி மாதம் பிறந்தது முதல் பலத்த காற்று வீசுகிறது. இதனால் தடுப்ப-ணைக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்-ளது. கடந்த வாரமும் நேற்றும் குறைந்த பயணிகளே வந்தனர். இதனால் பரிசல் துறையும், சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது.இதனிடையே தடுப்பணைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பய-ணிகள், பரிசல் துறை இருப்பதை அறியாமல், அருவியில் மட்டும் குளித்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறை, பரிசல் துறை இருப்பது குறித்து, அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை