மேலும் செய்திகள்
கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு
21 hour(s) ago
ஒன்றுமில்லாத ஓய்வறை சட்டசபை குழு அதிர்ச்சி
12-Dec-2025
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
11-Dec-2025
சென்னிமலை சாலையில் விரிவாக்க பணி துவக்கம்
11-Dec-2025
பவானி,:ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சமத்துவபுரம் மேடு பகுதியில், கோவையில் இருந்து, 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிய வேன் நேற்று முன்தினம் அதிகாலை சேலம் நோக்கி வந்தது. அப்போது, பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில், வேனின் முன்னால் சென்ற லாரியின் தார்பாய் கழன்று, காற்றில் பறந்து வந்து, தங்கம் ஏற்றி வந்த வேனின் முன்பகுதியை மூடியது. இதனால் சாலை தெரியாத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுற பக்கவாட்டில் வேன் கவிழ்ந்தது.வேன் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த சசிக்குமார், 30, ஊட்டியைச் சேர்ந்த பாதுகாவலர் பால்ராஜ், 40, காயமடைந்தனர். தகவலறிந்து, தங்க நகை நிறுவனத்தினர் மற்றும் போலீசார் வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மீட்பு வாகன உதவியுடன் வேனை மீட்டு, சித்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். ஆவணங்களை சரிபார்த்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு நகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.வேனில் கொண்டு வரப்பட்ட நகைகளின் மதிப்பு, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். நகைகளை எடுத்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வேன் என்பதால், நகைகள் சேதாரம் அடையவில்லை.
21 hour(s) ago
12-Dec-2025
11-Dec-2025
11-Dec-2025