உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா வேனை கடத்தி பதுக்கிய டிராபிக் போலீசார் சஸ்பெண்ட்

குட்கா வேனை கடத்தி பதுக்கிய டிராபிக் போலீசார் சஸ்பெண்ட்

ஈரோடு;பவானி கூடுதுறையில் போக்குவரத்து போலீசார் பிரபு, 28, சிவக்குமார், 30, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சர் வேனில் கடத்தி வரப்பட்ட, 1.50 லட்சம் மதிப்பிலான, 295 கிலோ குட்கா பொருட்களை, உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வெப்படையில் ஒரு வீட்டில் பதுக்கி, வேனை விடுவிக்க பேரம் பேசினர். இதனால் இருவரும் ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து, ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் இருவர் மீதும், குற்றவியல் நடைமுறை ரீதியாக, இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை