| ADDED : மார் 20, 2024 02:24 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 90 சதவீத துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.லோக்சபா
தேர்தல் நடத்தை விதியின் ஒரு பகுதியாக, உரிமம் பெற்ற துப்பாக்கியை,
உடனடியாக அரசிடம் ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்
உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் எண்ணிக்கை, 1,442. இதில்
கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு பணிக்கு, 39
துப்பாக்கிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறை காலத்திலும்
வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.மீதி துப்பாக்கிகளை
போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் ஆயுதப்படை, தனியார் வசமுள்ள துப்பாக்கி
சேமிப்பு கிடங்கிலும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. ஈரோட்டில்
தனியார் துப்பாக்கி சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இதுவரை, 90 சதவீத
துப்பாக்கி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.