உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகள் போராட்டத்தை ஆம் ஆத்மி, காங்.,- தி.மு.க., துாண்டி விடுகிறது

விவசாயிகள் போராட்டத்தை ஆம் ஆத்மி, காங்.,- தி.மு.க., துாண்டி விடுகிறது

ஈரோடு:''டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, தி.மு.க., துாண்டி விடுகிறது,'' என, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தொழில் பிரிவு மாநாடு, அவல் பூந்துறையில் நேற்று முன் தினம் நடந்தது. மாவட்ட தலைவர் வேதானந்தம், லோக்சபா தொகுதி அமைப்பாளர் பழனிசாமி, இணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்ற, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:சோமனுார் விசைத்தறிக் கூடம், பல்லடம் கோழி பண்ணைகள், நாமக்கல் போர்வெல் தொழிற்சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா பகுதியில், 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 9 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அக்சயா என்னும் சன்ன ரக அரிசிக்கான நெல்லை வேளாண் துறை உற்பத்தி செய்து தராததால் விலை உயர்ந்துள்ளது.வரும், 17, 18ல் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான கூட்டத்துக்கு பின், பெரிய கூட்டணி உருவாவதை பார்க்க முடியும். தமிழகத்தில் மதுவிலக்கு துறையை தவிர, பிற எந்த துறையும் லாபகரமாக இயங்கவில்லை. தமிழகத்தில், கூடிய விரைவில் மிகப்பெரிய மாற்றத்துக்காக காத்து கொண்டிருக்கிறோம். காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி பா.ஜ.,வில் இணைவது அவரது விருப்பம். தேசத்தின் மீது பற்றுள்ள யார் வேண்டுமானாலும் இணையலாம்.டில்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல. இடைத்தரகர்கள் தான். ஆம் ஆத்மி - தி.மு.க., - காங்., போராட்டத்தை துாண்டி விட்டுள்ளனர்.படித்த படிப்புக்கு ஏற்றவாறு, கொ.ம.தே.க., பொதுச் செயலர் ஈஸ்வரன் பேச வேண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா வரவேற்கத்தக்கது. தலைமறைவாக உள்ள அவரது சகோதரரையும் பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை