உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செயற்பொறியாளரை மாற்றக்கோரி முறையீடு

செயற்பொறியாளரை மாற்றக்கோரி முறையீடு

ஈரோடு: ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு, மாவட்ட துணை தலைவர் ஆதவன் ஆகியோர், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது: பவானிசாகர் அணையில் இருந்து கடந்தாண்டு இரண்டாம் போகத்துக்கு, 5 நனைப்புக்கு தண்ணீர் விடுவதாக அரசாணை வெளியிட்டு, மூன்று நனைப்புக்கு மட்டுமே தண்ணீர் வழங்கினர். கீழ்பவானி மறுசீரமைப்பு குறித்த வழக்கில் ஈரோடு செயற்பொறியாளர் திருமூர்த்தி, சுய விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டு வழக்கை தாமதப்படுத்தி வருகிறார். இதனால் கீழ்பவானி பாசனம் இந்தாண்டுக்கு கேள்விக்குறியாகிறது. விவசாயிகளை பிளவுபடுத்தி, பிரதான கால்வாயில் மறுசீரமைப்பு பணியில் தாமதத்தை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார். எனவே திருமூர்த்தியை மாற்றிவிட்டு, திறமையான செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை