உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 80 அடி உயர டவரில் ஏறி தற்கொலை முயற்சி

80 அடி உயர டவரில் ஏறி தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், 80 அடி உயர டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த, பழங்குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுன்டர் அறை, ரயில் டிரைவர்கள் அலுவலகம் அருகருகே உள்ளது. இதன் அருகே ரயில்வே பிளாட்பார்மிற்கு, இரவில் வெளிச்சம் தரும் வகையில், 80 அடி உயர ஹைமாஸ் லைட் டவர் அமைக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, 4:30 மணியளவில் ஆசாமி ஒருவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறி ஹைமாஸ் லைட் டவர் மீது ஏறினார். 60 அடி உயரம் சென்ற நிலையில், டவரின் தடுப்பு பலகையில் படுத்து கொண்டார். இதையறிந்த ஈரோடு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். டவர் மீது ஏறி, ஆசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 40 நிமிட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவரை கீழே இறக்கி, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவரிடம் விசாரித்ததில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, காவேரி ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த செல்வன், 42, என தெரிந்தது. சூரம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட பழங்குற்றவாளி என்பது தெரியவந்தது. ரயில்வே போலீசாரிடம் செல்வன் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் சூரம்பட்டி போலீசார் என்னை பிடித்து, சூரம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கு குறித்தும், கூட்டாளிகள் குறித்தும் தகவல் கேட்டு விசாரித்தனர்.இந்த டார்ச்சரால்தான் மது போதையில் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார், செல்வனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை