உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டேலண்ட் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு செஸ் போட்டி

டேலண்ட் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு செஸ் போட்டி

ஈரோடு: அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி நேற்று நடந்தது.இதில் அம்மாபேட்டை, பவானி, அந்தியூர் ஆகிய ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.டேலண்ட் வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் சரவணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகள், 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் என எட்டு பிரிவுகளாக நடந்தன. இதில் டேலண்ட் வித்யாலயா பள்ளி, 11 வயது பிரிவில் லிசாந்த், 14 வயது பிரிவில் சிவானி, 19 வயது பிரிவில் திவ்யாஸ்ரீ முதலிடம் பிடித்தனர். 14 வயது பிரிவில் கிருத்திக், சிவாலி, 17 வயது பிரிவில் மித்ரா இரண்டாமிடம் பெற்றனர். இதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.மாவட்ட சதுரங்க சர்க்கிள் தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு கல்வி முன்னாள் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி, சங்க நிர்வாக செயலாளர் கோபாலன், அம்மாபேட்டை காவேரி ரோட்டரி சங்க பட்டய தலைவர் ராமநாதன், அடுத்த ரோட்டரி ஆண்டின் தலைவர் அனந்த நாராயணன், பள்ளி முதல்வர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை