| ADDED : பிப் 15, 2024 10:57 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, அதிகப்படியான ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவை கூட ஜி.எஸ்.டி., விதித்து கடுமையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு, 600 ரூபாய்க்கு விற்கிறது. ஒரே பொருளுக்கு உற்பத்தி முதல் விற்பனை வரை, 3 கட்டமாக, 4 கட்டமாக ஜி.எஸ்.டி., வரி விதிப்பதால் அப்பொருளின் விலை, சாமான்ய மக்கள் வாங்க முடியாதபடி உயர்ந்து வருகிறது. காலாவதியான டோல்கேட்களை அகற்ற வேண்டும். காஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.மகளிர் காங்., மாவட்ட தலைவி தீபா தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகிளா காங்., தலைவி சிந்துஜா, கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், நிர்வாகிகள் மாரிமுத்து, அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.