உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்

டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்

சென்னிமலை: சென்னிமலை யூனியன் பசுவபட்டி, அத்திக்காட்டை சேர்ந்த செல்வம் மகன் கோபாலகிருஷ்ணன், 23; பசுவபட்டி பிரிவில் எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். பைக்கில் சென்னிமலைக்கு நேற்று காலை சென்றவர், 11:15 மணி அளவில் கடைக்கு திரும்பினார்.சென்னிமலை - காங்கேயம் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தினார். அப்போது எதிரே ஒரு டேங்கர் லாரி வரவே, அதன் மீது மோதாமலிருக்க, திடீர் பிரேக் போட்டதில், நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்தார். இதை கண்ட டேங்கர் லாரி டிரைவர், கோபாலகிருஷ்ணன் மீது லாரி ஏறுவதை தவிர்க்க, இடது பக்கம் திருப்பினார். அந்த இடத்தில் ரோட்டோரமாக இருந்த கம்பத்தில் மோதி நின்றது. இதில் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் பயந்து போன லாரி டிரைவர் நல்லப்பன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். நடுரோட்டில் விழுந்த கோபாலகிருஷ்ணனை மீட்ட அப்பகுதி மக்கள் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் மின் கம்பம் முறிந்ததால், சென்னிமலை பகுதியில் மின்தடை ஏற்பட்டது.மின்வாரிய ஊழியர்கள் புது கம்பம் அமைத்து பணியில் ஈடுபட்டனர்., ௫ மணி நேரத்துக்குப் பிறகு மின் வினியோகம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை