உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 95 பேருக்கு விரைவு பட்டா வழங்கல்

ஈரோட்டில் 95 பேருக்கு விரைவு பட்டா வழங்கல்

ஈரோடு: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான விரைவு பட்டா மாறுதல் திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வழங்கிய 95 பேருக்கு நேற்று கலெக்டர் காமராஜ், பட்டா மாறுதல் ஆணையை வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பட்டா மாறுதல் கேட்கும், பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தை பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை முழுமையாக இணைத்து, அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் கொடுத்து, அதற்கான ஒப்புகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும், பட்டா மாறுதல் கோரும் மனுக்களில் உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு 15 நாளுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய இனங்களுக்கு, மனு பெறப்பட்ட 30 நாட்களுக்குள்ளும், பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் சிட்டா நகல்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் எனவும், கலெக்டர் காமராஜ் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பலரும் விரைவு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பத்தனர். நேற்று, ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் காமராஜ் தலைமை வகித்து, 95 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையை வழங்கினார். ஆர்.டி.ஓ., சுகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி