உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகருக்கு 12,000 கன அடி வரத்து

பவானிசாகருக்கு 12,000 கன அடி வரத்து

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நேற்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி, கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்மட்டம் சரிந்து வந்தது. நான்கு நாட்களாக நீலகிரியில் நல்ல மழை பெய்கிறது. தண்ணீர் வரத்து உயர்ந்தது. நேற்று முன்தினம் 7,287 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 12 ஆயிரத்து 444 கன அடி தண்ணீர் வரத்தானது. இதன்மூலம், அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து, 83.65 அடியாக இருந்தது. ஆற்றில் 700 கன அடியும், வாய்க்காலில் 2,300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்