உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்து காட்சி

விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்து காட்சி

ஈரோடு,:பெருந்துறை வேளாண் துறை சார்பில், கம்புளியம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பங்கேற்ற கருத்து காட்சி நடந்தது.பெருந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரசாத் தலைமை வகித்து, திட்டங்கள், வேளாண் கிடங்குகளில் இருப்பில் உள்ள உயிர் உரங்கள், நுண்ணுாட்டம் பெற விரும்பும் விவசாயிகள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து பேசினார். கம்புளியம்பட்டி பஞ்., தலைவர் பூபாலன் முன்னிலை வகித்தார். பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளர் சுந்தரவதனா, நல்ல தரமான விதைகள் தேர்வு, பயிர் சாகுபடி முறைகள் பற்றி விளக்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரியா, தேனீ வளர்ப்பு, மரக்கன்று வினியோகம் பற்றியும், உதவி செயற்பொறியாளர் கந்தசாமி வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள் பற்றி விளக்கினார்.வேளாண் திட்டங்கள், மானிய விபரம், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுதல், நுண்ணீர் பாசன திட்டம், தோட்டக்கலை துறை பற்றி கருத்து காட்சிகள் இடம் பெற்றன.உதவி வேளாண் அலுவலர்கள் கோகிலா, தாமோதரன், விஸ்வநாதன், முன்னோடி விவசாயி சுப்பிரமணியம் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை