உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதிய மஞ்சள் விலை மேலும் அதிகரிப்பு

புதிய மஞ்சள் விலை மேலும் அதிகரிப்பு

ஈரோடு: ஈரோடு பகுதியில் நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த ஜன., 10க்குப்பின் புதிய மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதன் விலை குவிண்டால், 12,000 ரூபாயில் இருந்து நேற்று முன்தினம், 16,800 ரூபாயாக உயர்ந்தது.நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து வரத்தான சேலம் பெருவட்டு மஞ்சள் குவிண்டால், 19,030 ரூபாய்; சில மூட்டைகள், 18,800 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று இதுபோன்ற விலைக்கு மஞ்சள் வரத்தாகவில்லை. இருப்பினும் ஒரே நாளில், புதிய மஞ்சள், 700 முதல், 1,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது.நேற்று முன்தினம் விரலி குவிண்டால், 16,888 ரூபாய்; கிழங்கு அதிகபட்சம், ௧5,099 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று புதிய விரலி மஞ்சள், 17,699 ரூபாய்; கிழங்கு, 15,786 ரூபாய்க்கும் விற்றது. பழைய மஞ்சளில் விரலி அதிகபட்சம், 15,811 ரூபாய்; கிழங்கு, 14,859 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் புதிய மஞ்சள் குவிண்டாலுக்கு, 700 முதல், 1,000 ரூபாய் வரை விலை உயர்ந்ததால், விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை