உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

அந்தியூர்:பர்கூர்மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 33.46 அடி உயரம் கொண்ட அணையில், 29.27 கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், 2,924 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன், ௧௭ம் தேதி வரை, நுாறு நாட்களுக்கு, 96.94 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். நிகழ்வில் உதவி பொறியாளர் கிருபாகரன், சங்கரபாளையம் பஞ்., தலைவர் குருசாமி மற்றும் பாசன விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை