உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சினிமா வெளியிட தடை கோரி மனு

சினிமா வெளியிட தடை கோரி மனு

ஈரோடு:அந்தியூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, வக்கீல் அணி மாநில துணை செயலாளர் சுரேஷ், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு:நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த குழந்தை குழந்தை C/O கவுண்டம்பாளையம் திரைப்படம், இன்று திரையிடப்படுகிறது. சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் தலைவரான திருமாவளவன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வெளியானால் சாதி மோதல் ஏற்படும் சூழல் உண்டாகும். படத்தை ஈரோடு மாவட்டத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை