உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 நாள் வேலை திட்ட பெயர், செயல் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பெயர், செயல் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே தி.மு.க., கூட்டணி தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்-பாட்டம் செய்தனர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் சுப்பிரமணியம் தலைமை வகி த்தார். தி.மு.க., மாநகர செயலர் சுப்பிரமணியம், தொ.மு.ச., கோபால், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் பிரபாகரன், சி.பி.ஐ.எம்.எல்., கார்த்திகேயன், ம.தி.மு.க., ரவி உட்பட பலர் பேசினர்.தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழி-லாளர் நலச்சட்டங்களை, தொழிலாளர் சட்ட தொகுப்பு என, நான்காக மாற்றியதை ரத்து செய்து, முன்பு உள்ளது போன்ற சட்-டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இச்சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களுக்கு சாதகமானதாக இல்லை. தொழில் நிறுவ-னங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்-ளது.காந்தி பெயரில் செயல்பட்ட, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி, திட்ட நிதியில் மாநில அரசின் பங்கை அதிகரித்துள்ளதை கைவிட வேண்டும். முன்பு போன்ற பெயரில், நிதி பங்கீட்டிலேயே அத்திட்டம் தொடர வேண்டும். அல்லது, தமிழகத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்ப-டுவர், எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை