உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சென்னிமலை: சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமான் மீது, 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். தென்னாட்டில் சைவம் தழைத்தோங்க செய்த நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் 63 நாயன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது. சென்னிமலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட 63 நாயன்மார் உற்சவர் புறப்பாடும் நடந்தது. விழாவுக்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை