உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மணமான கள்ளக்காதலி மனம் மாறியதால் டிரைவர் தற்கொலை

மணமான கள்ளக்காதலி மனம் மாறியதால் டிரைவர் தற்கொலை

ஈரோடு: ஈரோடு, செட்டிபாளையம், பாரதிபாளையம் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 29, ஆட்டோ டிரைவர். திருமணம் ஆகாதவர். ஆனால், திருமணமான பெண்ணுடன் பழகி வந்தார். இரு வாரங்களுக்கு முன் அப்பெண்ணுடன் கேரளா மாநிலத்துக்கு சென்று விட்டார். இருவரையும் வடிவேலுவின் சகோதரர் ஜீவானந்தம், அப்பெண்ணின் கணவர் கண்டுபிடித்து அழைத்து வந்து அறிவுரை கூறினர்.இதனால் அந்தப்பெண் கணவருடன் சென்றார். இதில் மனவேதனை அடைந்த வடிவேல், கடந்த, 1ம்தேதி விஷம் குடித்து விட்டார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ