உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 2 பைக் திருட்டு: போலீசில் புகார்

2 பைக் திருட்டு: போலீசில் புகார்

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு பைக்குகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 39; இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதே போல் நல்லாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் 51, இவர் தனக்கு சொந்தமான பைக்கை தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு துாங்கியுள்ளார். காலையில் பார்த்த போது அவரது பைக்கை மர்ம திருடி சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை