உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 65 பேர் இறந்தனர். தொடர் சிகிச்சையில் குணமடைந்த 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் குணமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 6 பேர் என மொத்தம் 14 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ