உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா துவக்கம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினருக்கான லோன் மேளா நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் மற்றும் குழுக்கள் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான லோன் மேளா கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வரும் 26 ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. அதேபோல், உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வரும் ஆக.,2ம் தேதியும், திருக்கோவிலுார் தாலுகாவில் வரும் 9ம் தேதியும் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, உரிய வருமான சான்றுடன் உள்ளிட்டவையுடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி, கல்லுாரி மாற்று சான்றிதழ், உண்மை சான்று, கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். லோன் மேளா முகாமில் அனைத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை